ஒரே மாதத்தில் MyJPJ 28 மில்லியன் ரிங்கிட் வசூல் – மிகப்பெரிய சாதனை

கோலாலம்பூர்:

MyJPJ டிஜிட்டல் செயலி வழி சாலைப் போக்குவரத்து இலாகா கடந்த மாதம் 28 மில்லியன் வருமானத்தை பதிவு செய்தது.

இந்த புதிய அறிமுகம் கடந்த ஜுன் மாதம் அமல்படுத்தப்பட்ட பின்னர் வருமான வசூலில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது என்று ஜேபிஜே தலைமை இயக்குனர் ஏடி ஃபட்லி ரம்லி Aedy Fadly Ramli கூறினார்.

இந்த வசூலானது இதே காலக்கட்டத்தில் மைசிக்காப் MySikap போர்ட்டல் வழி திரட்டப்பட்ட 3 மில்லியன் ரிங்கிட்டை காட்டிலும் 9 மடங்கு அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜேபிஜே ஏற்படுத்தி தந்திருக்கும் வசதிகளையும் செளகரியங்களையும் பொது மக்கள் ஏற்றுகொண்டு அங்கரித்திருப்பதையே இந்த சாதனை காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து நேற்று வரை 12.7 மில்லியன் பேர் MyJPJ செயலியை பதிவிறக்கம் செய்திருக்கின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here