மலேசிய டெஸ்லா உரிமையாளர் ஒருவர் இவி சார்ஜருக்கு EV Charger மின்சாரம் திருடியதற்காக கையும் களவுமாக பிடிபட்டார்.
மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு மின்சாரத்தை அந்நபர் திருடி வந்திருப்பதை தெனாகா நேஷனல் பெர்ஹாட் டெக்னிஷியன்கள் கண்டுபிடித்தனர்.
அந்த உரிமையாளரின் வீட்டில் அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள் இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்தி இருப்பதை கண்டு பிடித்தனர்.
இந்த வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சார்ஜிங் ஸ்டேஷனில் டி என் பி மீட்டர் இணைக்கப்படவில்லை. மின்சார கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்கு அவர் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டிருக்கிறார் என்று அந்த டெக்னிஷியன்கள் குறிப்பிட்டனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது சட்டத்திற்கு புறம்பாக இணைக்கப்பட்டிருந்த மின் வயர்களை டிஎன்பி டெக்னிஷியன்கள் துண்டித்தனர்.
1990 மின்சார விநியோக சட்டத்தை மீறியிருக்கும் அந்நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.










