பி40, எம்40: 654 இந்திய இளைஞர்களூக்கு GDL லோரி ஓட்டுநர் லைசென்ஸ்; மித்ரா உதவி

கோலாலம்பூர்:

பி40, எம்40 பிரிவுகளை சேர்ந்த இந்திய இளைஞர்கள் 654 பேருக்கு லோரி GDL லைசென்ஸ் உதவி திட்டம் அமல்படுத்தப்படும் என்று மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவு அமல்படுத்தும் என்று அதன் சிறப்பு பணிக்குழு தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் பரமேஸ்வரன் ஜோகூர் பாருவில் இன்று காலை அறிவித்தார்.

ஜேபிஜே எனப்படும் சாலைப் போக்குவரத்து இலாகா அடையாளம் காட்டும் வாகனமோட்டும் பயிற்சி கழகத்துடன் இணைந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.

வரும் செப்டம்பர் மாதம் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று பிரபாகரன் குறிப்பிட்டார்.

மித்ரா கல்வி திட்டத்திற்கு 35 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலாதாக பி40 பிரிவை சேர்ந்த 4 ஆயிரத்து 545 பாலர் பள்ளி மாணவர்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் கல்வி உதவி மானியம் வழங்கப்படும். தகுதி பெறும் பாலர் பள்ளிகள் 2024 செப்டம்பர் மாதம் உதவித் தொகை வழங்கப்படும்.

இரண்டாவதாக உயர் கல்வி மையங்களில் முதலாம் இரண்டாம் ஆண்டுகளில் பயிலும் பி40 பிரிவை சேர்ந்த 12 ஆயிரத்து 400 மாணவர்களுக்கு ஒரு தடவை உதவித் தொகையாக தலா 2 ஆயிரம் ரிங்கிட் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். உடற்பேரு குறைந்தவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் 2024 அக்டோபர் மாதம் திறக்கப்பட்டு 2024 டிசம்பர் மாதம் மாணவர்களின் பேங்க் சிம்பானான் வங்கி கணக்கில் உதவித் தொகை சேர்க்கப்படும் என்று பிரபாகரன் சொன்னார்.

சமூக நல்வாழ்வு திட்டங்களுக்கு 23.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் அறிவித்தார்.

பி40, எம்40 பிரிவை சேர்ந்த 800 சிறுநீரக நோயாளிகளின் சுத்திகரிப்பு செலவுகளுக்கு 8 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும். ஒவ்வொரு நோயாளியும் ஆயிரம் ரிங்கிட் பெறுவர். இதற்காக 1,153 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது என்று பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும் உடல் நலம், பொருளாதாரம் ஆகிவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பி40, எம்40 மக்களுக்கு உதவுவதற்கு 15.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இத்திட்டத்தின் வழி 14 ஆயிரத்து 330 பேர் பயன் பெறுவர். இதற்கான விண்ணப்பம் 2024 நவம்பர் மாதம் திறக்கப்படும் என்றும் பிரபாகரன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here