கையில் சமையல் எரிவாயுத் தோம்புடன் வாகனமோட்டிகளை அலற வைத்த ஆடவர்

கோலாலம்பூர்:

ரு கையில் கியாஸ் gas தோம்பைத் தூக்கிக்கொண்டு மற்றொரு கையில் எண்ணையை முறுக்கிக் கொண்டு சிவப்பு விளக்கையும் பொருட்படுத்தாமல் சாலை சிக்னலை கடந்து சென்ற ஒரு நபரின் ஆபத்தான செயலை வாகனமோட்டிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நபரின் இச்செயலால் பல வாகனமோட்டிகள் திடீர் பிரேக் வைக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இதன் தொடர்பான ஒரு காணொலி தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய சொந்த உயிரையும் மதிக்காமல் மற்ற சாலைப் பயணர்களின் உயிரையும் மதிக்காமல் செயல்பட்ட இந்நபருக்கு பொது மக்களா கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விபத்து நிகழ்ந்து இவருக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் இதயமே இல்லாத வாகனமோட்டிகள் என்று வசைபாடி இவரை தியாகியாக்கியிருப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here