இலங்கை – இந்தியா இடையிலான கப்பல் சேவை திடீர் ரத்து

நாகப்பட்டினம்:

ந்தியா- இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட பயணியர் கப்பல் சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த 16ம் தேதி, சிவகங்கை என்ற சிறிய கப்பல், நாகையில் இருந்து இலங்கை சென்றது; மறுநாள் நாகை திரும்பியது.

நேற்று முன்தினம், ஒன்பது பேர் மட்டுமே இலங்கைக்கு பயணம் செய்தனர். பின், 27 பேருடன் நாகை திரும்பியது.

இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு இலங்கை செல்ல வேண்டிய கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது.

அந்த கப்பல் நிறுவன இயக்குனர் நிரஞ்சன் கூறுகையில், ”முன்பதிவு இல்லாததால் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது.

ஆக., 31ம் தேதி வரை, வாரத்தில், செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மட்டும் சேவை இருக்கும். பயணியர் வரவேற்பிற்கேற்ப செப்., முதல், நாள்தோறும் கப்பல் போக்குவரத்து இருக்கும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here