கோலாலம்பூர்:
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியாவுக்கு மூன்று நாள் அலுவல் பயணம் மேற்கொண்டு திங்கட்கிழமை புதுடெல்லி சென்றடைந்தார்.
இந்திய அதிபரின் ராஷ்டிராபதி பவனில் அன்வாருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பாசத்துடன் கரம் பற்றி அழைத்துச் சென்றார்.
இந்தியா – மலேசியா இடையே கடந்த 67 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் நீடித்து வரும் பரஸ்பர ஒத்துழைப்பு வருங்காலத்தில் இன்னும் வலுப்பெறும் என்று இரு நாடுகளின் தலைவர்களும் நம்புகின்றனர்.
பிரதமருடன் சென்றிருக்கும் உயர்மட்ட பேராளர் குழுவில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா சிறப்பு பணிக்குழு தலைவருமான ப.பிரபாகரன் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர்.