கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட 50 வயதிலான ஒரு தொழிலதிபர் ஏழு ஆண்டுகளாக 46 வயது தனித்து வாழும் தாய்க்கு காதல் தொல்லை தந்திருக்கிறார்.
இதனால் தீராத மன உளைச்சலுக்கு ஆளான சான் Chan என்ற அந்த தனித்து வாழும் தாய், இந்த இம்சையில் இருந்து விடுபட மசீச பொதுப் புகார் தலைவர் டத்தோஸ்ரீ மைக்கல் சோங்கின் உதவியை நாடினார்.
இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான தனக்கு அந்த ‘டத்தோஸ்ரீ’ ஐ லவ் யு என்று எழுதி இரண்டாயிரத்துக்கும் அதிகமான இமெயில் இ-மெயில் அனுப்பி இருக்கிறார் என்றும் சொன்னார்.
மேலும் தனக்கு ஒரு குழந்தை பெற்று தந்தால் பத்து லட்சம் ரிங்கிட் தருவதாக பேரம் பேசினார் என்று அப்பெண்மணி குறிப்பிட்டார்.