ஆற்றில் நீந்திய 13 வயது சிறுமி நீரில் மூழ்கி மரணம்

ரானாவ்:

நேற்று மதியம் சண்டக்கானின் ஜாலான் ரானாவ், கம்போங் சுங்கங்கோன் என்ற இடத்தில், ஆற்றில் நீந்தியபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

Nerlyne Christine Januai, 13, என்ற அந்த சிறுமி நீரில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் கிராம மக்களால் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்று, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைமை உதவியாளர், கண்காணிப்பாளர் ரித்வான் முகமட் தைப் கூறினார்.

நேற்று மாலை 4.37 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு முதலில் தகவல் கிடைத்தது என்றும், அதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைக்காக தீயணைப்பு வீரர்கள் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றும் அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here