டோட்டோ ஜாக்பாட்டில் 17 மில்லியன் ரிங்கிட்டை வென்ற பேராக்கை சேர்ந்த ஆடவர்

பேராக்கைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர், தனது குடும்ப உறுப்பினர்களின் வயதைக் கணக்கில் வைத்து எடுத்த Power Toto 6/55 ஜாக்பாட்டில் ஆகஸ்ட் 18, 2024 அன்று 17 மில்லியன் ரிங்கிட்டை ஜ வென்றுள்ளார்.

தோட்டத் தொழிலாளியாக பணிபுரியும் 61 வயதான வெற்றியாளர் தாம் பல வருடங்களாக ஒரே இலக்கத்தில் பந்தயம் கட்டியதாகத் தெரிவித்தார். இந்த எண்கள் உண்மையில் எனது குடும்ப உறுப்பினர்களின் வயது, அந்த நேரத்தில் சில அர்த்தமுள்ள நிகழ்வுகள் நடந்தன. நான் வேண்டுமென்றே அவர்களின் வயதைத் தேர்ந்தெடுத்து இந்த எண்களில் பந்தயம் கட்ட ஆரம்பித்தேன் என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

திங்கள்கிழமை செய்தித்தாளில் வெளியான முடிவுகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், உடனடியாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து பெரிய செய்தியைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

வெற்றி பெற்றவர், தான்  கோட்டீஸ்வரர்  என்பதனை நம்ப முடியாமல் இருப்பதால்  வெற்றி பெற்ற தொகையை எப்படி செலவிடுவது என்று திட்டமிடவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here