அம்னோ பொதுக்கூட்டத்தில் நஜிப் குறித்து பேசியபோது கண்ணீர் விட்ட ஜாஹிட் மகள்

­ அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் மகள் நூருல்ஹிதாயா ஜாஹிட், இன்று கட்சியின் பொதுக்குழுவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குறித்து பேசிய போது கண்ணீர் விட்டார். ஜாஹிட்டின் கொள்கை உரையை விவாதித்த நூருல்ஹிதாயா, நஜிப்பின் கைது, தண்டனை குறித்து ஆண்டுதோறும் நடைபெறும் கட்சியின் பொதுக் கூட்டங்களுக்கான இடமான டேவான் மெர்டேகாவில் உணர முடியும் என்றார்.

நான் பங்கேற்கும் ஒவ்வொரு பிரிவு கூட்டத்திலும், நஜிப்பிற்கு அவரது ஆதரவாளர்கள் அன்புடன் வழங்கிய புனைப்பெயரை பயன்படுத்தி, ‘போஸ்கூ’வுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்று வனிதா அம்னோ பிரதிநிதிகள் வலியுறுத்துவதை நான் கேட்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் இந்த அழைப்புகளை ஆதரிப்பதோடு, சவால்கள் மற்றும் வெற்றிகள் இரண்டிலும் அவரது பங்களிப்பை அங்கீகரித்து, அம்னோவின் உயர்மட்டத் தலைமை ‘போஸ்கூ’க்கான நீதியை உறுதியாக நிலைநிறுத்தும் என்று நம்புகிறேன்.

நேற்று, அம்னோ பொதுச்செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகி, நஜிப்பிற்கு நீதி மற்றும் முழு அரச மன்னிப்பு கோரி 72 பிரிவுகள் பிரேரணைகளை சமர்ப்பித்துள்ளன என்றார். நாடளாவிய ரீதியில் மொத்தம் 171 பிரிவுகளில் இருந்து இந்த பிரேரணைகள் கிடைக்கப்பெற்றதாக அவர் கூறினார்.

70 வயதான நஜிப், மீது மூன்று கிரிமினல் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. கூட்டரசு நீதிமன்றம் தனது இறுதி மேல்முறையீட்டை நிராகரித்ததைத் தொடர்ந்து, தனது தொடக்க தண்டனையான 12 ஆண்டு சிறைத் தண்டனையை ஆகஸ்ட் 23, 2022 அன்று தொடங்கினார்.

பிப்ரவரி 2 அன்று, முன்னாள் அம்னோ தலைவரின் சிறைத்தண்டனை 12 ஆண்டுகளில் இருந்து 6 ஆகவும், அபராதம் 210 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் அறிவித்தது. அவர் தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் மற்றும் ஆகஸ்ட் 23, 2028 அன்று விடுவிக்கப்படுவார்.

ஏப்ரலில், முன்னாள் மாமன்னர்  தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் வகையில் அரசாங்கத்தை வலியுறுத்தி அவர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here