பகாங், குவாந்தான் புக்கிட் பெலிண்டுங் பகுதியில் மலையேறும் போது, 20 வயதுடைய நபர் வெப்பத் தாக்குதலால் நேற்று உயிரிழந்தார். காலை 6.40 மணிக்கு மலையேற்றம் தொடங்கியது என்றும், பிற்பகல் 3 மணியளவில் புக்கிட் பெலிண்டுங் காட்டு நடைபாதையில் மயங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பகாங் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாநில சுகாதார இயக்குனர் டாக்டர் ருஸ்தி அப்துல் ரஹ்மான் கூறுகையில் ஆபத்தான நிலையில் இருந்த நபரை, தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரவு 9.39 மணியளவில் உறுப்புகளின் செயலிழப்புடன் கூடிய வெப்பத் தாக்குதலால் இறந்தார் என்று ருஸ்டி கூறியதாக சினார் ஹரியன் கூறுகிறது.