கவின்மலர், ஜார்ஜ்டவுன்:
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கடந்த கால நடவடிக்கைகளில் நிதி முறைக்கேடுகள் நடந்துள்ளனவா? என்பது பற்றி எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கட்டும் என்று அறப்பணி வாரியத்தின் நடப்புத் தலைவர் ஆர்.எஸ்.என்.ராயர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
கடந்த சில காலமாகவே இந்து அறப்பணி வாரியத்தின் கடந்த கால நிர்வாகத்தின் மீது கடுமையான புகார்களும் குறைக் கூறல்கறும் கூறப்பட்டு வந்துள்ளன.
அது தொடர்பாக காவல்துறை புகார்களும் எம்ஏசிசி-இல் புகார்களும் செய்யப்பட்டுள்ளன.
என்றாலும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற அதி்ருப்தி பொதுமக்களிடம் குறிப்பாக மாநில இந்துக்களுக்கு இடையே நிலவி வருவதை நாங்கள் அறிவோம்.அது தொடர்பான பல புகார்களையும் நாங்கள் பெற்றுள்ளோம்.
இந்நிலையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நடப்பு நிர்வாகத்தின் ஆணையர்கள் என்ற முறையில் அதிகாரத்தின் அடிப்படையில் மக்களை அணுகாமல் சேவையின் அடிப்படையில் மக்களை அணுகும் நோக்கத்தில் இரண்டு பொது மக்கள் சந்திப்புக் கூட்டங்களை ( Town Hall Meeting ) நடத்தினோம்.
அங்கு மக்கள் எங்களிடத்தில் வெளிப்படுத்திய முக்கிய கருத்துககளில் ஒன்று தனியார் கணக்காய்வு நிறுவனத்தின் வழி வாரியத்தின் முந்தைய கணக்குகளை மீள்ஆய்வு செய்ய வேண்டும் என்பதும் அடங்கும்.அதில் ஏதேனும் நிதி முறைகேடு நடந்ததற்கான தடயங்கள் இருக்குமானால் அதனை ஊழல் தடுப்பு ஆணையத்தின் மேல் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதாகும்.
அதன் அடிப்படையில் தனியார் கணக்காய்வு நிறுவனத்தின் ஆய்வின் முடிவுகளில் முறைகேடுகள் இருக்கலாம் என்ற சில கூறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால் நாங்கள் எம்ஏசிசி-இன் மேல் விசாரணைக்கு வழி விடும் வகையில் கணக்காய்வு நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பினாங்கு மாநில கிளையிடம் ஒப்படைததிள்ளோம் என்று ரரயர் தெரிவித்தார்.
முன்னதாக கொம்தாரின் ஐந்தாவது மாடியிலுள்ள கூட்ட அறையில் நடந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர்களான பினாங்கு மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, மேலவை உறுப்பினரும் வாரியத்தின் துணைத் தலைவருமான டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன்,பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன்,ம.இ.கா. பினாங்கு மாநில தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ ஜெ.தினகரன்,வர்த்தக சங்கத் தலைவர் டத்தோ பார்த்திபன் உட்பட ஆணையர்கள் வருகைத் தந்திருந்தனர்.