கோலாலாம்பூர்:
சபாவில் உள்ள ஓர் அரசாங்க மருத்துவமனையில் டாக்டர்கள் கடுமையான பகடிவதைக்கு உள்ளாகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சுகாதார அமைச்சு ஒரு சுயேச்சை விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று எம்எம்ஏ எனப்படும் மலேசிய மருத்துவ சங்கம் வலியுறுத்தியது.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட் இந்த கொடிய கலாச்சாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு விரைந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்று எம்எம்ஏ தேசியத் தலைவர் டாக்டர் அஸிஸான் அப்துல் அஸிஸ் கேட்டுக்கொண்டார்.
இக்கொடிய செயல்கள் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மட்டும் அன்றி நோயாளிகளுக்கும் பாதகங்களை ஏற்படுத்தும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பகடிவதை சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதற்கான ஆதாரங்கள் கடிதங்களாக உள்ளன என்று டாக்டர் அஸிஸான் குறிப்பிட்டார்.