மேகலா மன்றாடல்: இரு பெண் பிள்ளைகளுடன் அல்லாடுகிறார்

கோலாலம்பூர்:

இனியும் பாடுவதற்கும் துணி தைப்பதற்கும் முடியாது என்ற பட்சத்தில் தனித்து வாழும் தாய் 44 வயது என்.மேகலா மக்களின் உதவியை நாடி இருக்கிறார்.

கணவர் இறந்துவிட்ட நிலையில் பள்ளி செல்லும் 15 வயது ஆர்.ரினெஷா, 11 வயது ஆர்.ஆர்த்தி ஆகிய இரு பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி வந்தார்.

ஏற்கெனவே கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மேகலா, ஒரு விபத்தின் காரணமாக இரண்டு கால்களையும் இழந்திருக்கிறார்.

அதுமட்டும் இன்றி அவரின் மகள் ஆர்த்தியும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவ செலவையும் கவனிக்க வேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்ட மேகலா, முன்பு போல இனி பாடவும் முடியாது வேலை செய்யவும் முடியாது என்றார்.

குடும்பத் தலைவியாக முழுச் சுமையும் என் தோளில் ஏறிவிட்டது. மூத்தப் மகள் ரினேஷாவுக்கு இடது கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறது.

கணவரின் இறப்புக்கு பின்னர் பெர்கேசோ வழங்கும் 1,200 மாதாந்திர ஓய்வூதிய பணத்தைக் கொண்டு செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை என்றார்.

மேகலா தன் பிள்ளைகளுடன் எண் No.6, Lorong Anandoo, Buntong எனும் முகவரியில் வசிக்கிறார். இவரை 017-8652284 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here