முதல்வர் சீட்டில் கெஜ்ரிவால் உட்கார முடியாது: சுப்ரீம் கோர்ட் விதித்த ஜாமின் நிபந்தனை!

புதுடில்லி:

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட், ‘முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது’ என நிபந்தனை விதித்துள்ளது.

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் இன்று (செப்.,13) ஜாமின் வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டின் கண்டிஷன் விபரம் பின்வருமாறு:

* மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது.

* முதல்வர் அலுவலகத்திற்கு கெஜ்ரிவால் செல்லக்கூடாது.

* கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது.

* வழக்கு தொடர்பான எந்த சாட்சியுடனும் தொடர்பு கொண்டு பேசக் கூடாது. விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்ததும், ஹரியானா சட்டசபை தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்ய வைக்க வேண்டும் என ஆம் ஆத்மி திட்டம் தீட்டியது; சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவரம் தெரிந்த அரசியல் விமர்சகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here