ஷா ஆலம்:
மஇகா பொதுப் பேரவை சபாநாயகராக பேராசிரியர் செனட்டர் டான்ஸ்ரீ டாக்டர் முகமட் ஹனிபா ஹாஜி அப்துல்லா இன்று காலை நியமனம் செய்யப்பட்டார்.
டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே. உபைதுல்லாவுக்கு அடுத்து மிக நீண்ட கால இடைவெளிக்கு பிறகு முஸ்லிம் சமுகத்தவர் ஒருவரை அப்பதவியில் நியமனம் செய்து, ஒரு புதிய வரலாற்றை மஇகா பதிவு செய்திருக்கிறது என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார்.
இன்றைய பொதுப் பேரவை நடப்புகளை டான்ஸ்ரீ ஹனிபா திறம்பட வழி நடத்தினார்.