இரட்டை அடுக்கு பேருந்து சாலை தடுப்பில் மோதியதில் 3 பேர் படுகாயம் – 30 பேருக்கு லேசான காயம்

‍ஈப்போ, வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் KM273 தெற்கு நோக்கிச் செல்லும் இரட்டை அடுக்கு பேருந்து சாலை தடுப்பில்  மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 31 பேர் லேசான காயங்களுக்கு ஆளாகினர்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) சபரோட்ஸி நோர் அஹ்மத் கூறுகையில், திங்கள்கிழமை (செப்டம்பர் 16) அதிகாலை 1.10 மணிக்கு நடந்த சம்பவத்திற்குப் பிறகு கீழ் தளத்தில் இருந்த மூன்று பயணிகள் இருக்கைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டனர். மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்தின் மேல் தளத்தில் அமர்ந்திருந்த மற்ற 30 பயணிகள் மற்றும் ஓட்டுநர் அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் தாங்களாகவே வாகனத்தில் இருந்து இறங்கி மருத்துவ பணியாளர்களிடம் சிகிச்சை பெற்றனர் என்று அவர் கூறினார். மீட்புப்பணி அதிகாலை 2.45 மணிக்கு முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here