கோலாலம்பூர் :
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நேற்று பேஜர் வாக்கி டாக்கி வெடித்துச் சிதறியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும், குறித்த வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அந்நாட்டின் நிலைமையை வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று அது நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டில், உயிரிழந்த ஹிஸ்புல்லா போராளிகளுக்கான இறுதிச் சடங்கு நடந்துகொண்டிருந்தபோது வாக்கி டாங்கிகள் வெடித்ததாகவும், அதன் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.
எனவே அங்குள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், லெபனானின் தெற்குப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.