இ-ஹெய்லிங் ஓட்டுநரை கொலை செய்ததாக முன்னாள் மனைவி மற்றும் அவரது மாற்றாந்தம்பி ஆகியோர் இணைந்து தவாவ் உயர்நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. நூரிமா ஜூலி 35, மற்றும் சதாம் கிரம் 30, ஆகியோர் நீதிபதி டங்கன் சிகோடோல் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் விசாரணை கோரியதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.
ஜனவரி 13, 2023 அன்று இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை ஜாலான் அஞ்சூர் ஜுவாரா, பத்து 5 ஜாலான் அபாஸ் அருகே உள்ள செம்பனை தோட்டத்தில் நோர்மன் பகராடு 61, கொலை செய்யப்பட்டதாக அவர்கள் மீது கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டன. அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் படிக்கப்பட்டது. இது மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி தண்டனை வழங்கப்படலாம். வழக்கிற்கான அடுத்த தேதி அக்டோபர் 18 ஆம் தேதியை நீதிபதி நிர்ணயித்ததுடன், வழக்கை விசாரிப்பதில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளுமாறு சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதியிடம் விண்ணப்பம் சமர்ப்பித்தார்.
நூரிமா வழக்கறிஞரின் முக்கிய சாட்சியாக ஆஜராகிய முதல் வழக்கை அவர் தலைமை தாங்கியதால், அநீதி மற்றும் பாரபட்சத்தைத் தடுப்பதற்காக இது நடந்ததாக டங்கன் கூறினார். அந்த விசாரணையில், நூரிமா கொலையை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டதையடுத்து, முன்னாள் கிழக்கு சபா பாதுகாப்புக் கமாண்ட் (எஸ்காம்) அதிகாரி மாட் ஜாகி ஜைன் உட்பட 8 பேரை உயர்நீதிமன்றம் விடுவித்தது.