உடமைகளை சாக்குப் பையில் எடுத்து வந்த யூஎம்எஸ் மாணவி: விரைந்து செயல்பட்ட கல்வி அமைச்சர்

சாக்குப் பையில் தன் உடமைகளை அள்ளிக்கொண்டு யூஎம்எஸ் எனப்படும் யூனிவர்சிட்டி மலேசியா சபா பல்கலைக்கழகத்திற்கு வந்த ஒரு மாணவி, கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக்கின் கண்களில் கண்ணீரை சுரக்க வைத்துவிட்டார்.

ரஃபிடா ஸைனுடின் என்ற அம்மாணவிக்கு நிதி உதவியை உடனடியாக செப்டம்பர் 29 ஆம் தேதியே ஏற்பாடு செய்தார் அமைச்சர்.

சபா முதலமைச்சரின் அரசியல் செயலாளர் செகு ரஹ்மான், யூஎம்எஸ் விரிவுரையாளர் டாக்டர் அப்துல்லா பாடே ஆகியோரை தொடர்புகொண்டு அந்த மாணவிக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த தகவல் ஃபட்லினாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை தொடங்குவதற்கு உடமைகளை ஒரு சாக்குப் பையில் அம்மாணவி எடுத்து வந்த காட்சி பலரின் கண்களை ஈரமாக்கியது.

சண்டக்கானை சேர்ந்த ரஃபிடா லாபுவான் மெட்ரிக்குலேஷன் கல்லூரியில் மிகச் சிறந்த புள்ளிகளை பெற்றிருக்கிறார்.

இதே நாளில் தம்முடைய மூத்த பிள்ளையை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக சென்ற தமக்கு ரஃபிடாவின் நிலை தம் இதயத்தை உலுக்கி எடுத்துவிட்டதாக ஃபட்லினா ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here