கோலாலம்பூர்:
கேஎல் விஸ்மா டிரான்சிட்டில் சில பாலஸ்தீனியர்கள் மோசமாக நடந்துகொண்டதற்காக இங்குள்ள அந்நாட்டின் தூதர் மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இவர்களில் சிலர் தாயகம் திரும்புவதற்கு விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் விருப்ப கடிதத்தில் கையொப்பமிட வேண்டும் என்று வாலிட் அபு அலி கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள விஸ்மா டிரான்சிட்டில் பாலஸ்தீன மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களில் இரண்டு பெண்கள் சில தினங்களுக்கு முன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததோடு சிலிப்பர்களை விட்டெறிந்தும் பூந்தொட்டிகளை உடைத்தும் பதற்றத்தை ஏற்படுத்தினர்.
இச்சம்பவம் சமுக ஊடகங்களில் பரவி மலேசியர்களுக்கு கோபமூட்டியது. இவர்கள் பாலஸ்தீனத்திற்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அங்கு வந்து சம்பவம் குறித்து விளக்கம் பெற்ற வாலிட் அபு அலி, சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் இனி இது போன்ற சம்பவம் நிகழாது என்றும் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்தின் சார்பில் அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூதர் கூறினார்.











