தஞ்சோங் மாலிம்: ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்தில் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், சமீபகாலமாகவோ அல்லது கடந்த காலத்திலோ நாட்டின் வருவாயில் இருந்து பில்லியன்கணக்கான ரிங்கிட்டைப் பறிக்கும் நபர்களை பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறினார். ஆம், அவர்கள் நாட்டுக்கு பங்களித்திருக்கிறார்கள்… ஆனால் அது திருடுவதை நியாயப்படுத்தாது என்று பிரதமர் கூறினார்.
சனிக்கிழமை (அக் 5) யுனிவர்சிட்டி பெண்டிக்கான் சுல்தான் இட்ரிஸில் (UPSI) “Za’ba Seabad Pemikir Kemiskinan” தேசிய கல்வி தினம் குறித்த விரிவுரையில் அவர் கூறினார். பேராக் மென்டேரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லிஹ் காங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், நாட்டின் கஜானாவில் இருந்து திருடி சொத்துக்களை குவித்த முன்னாள் தலைவர்களுக்கு, பணத்தை மக்களுக்கும் நாட்டுக்கும் திருப்பித் தருமாறு அன்வார் கேட்டுக் கொண்டார். சிலர் தேசத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளை, உண்மையில் அவர்கள் பின்பற்றவில்லை என்று அவர் கூறினார். நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் மலாய் தலைவர்களிடம், உண்மையான போராளியாக, நீங்கள் திருடிய பணத்தை மக்களுக்கும் நாட்டுக்கும் ஒப்படைத்து விடுங்கள் என்று அவர் கூறினார்.