பொங்கலுக்கு வேற லெவல் என்டர்டெயின்மென்ட்”: அஜித் மேனேஜர் பகிர்ந்த புகைப்படம் வைரல்

மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித்குமார், அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் வேற லெவல் என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். இப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அதோடு இந்த படத்தில் அஜித்தின் ஸ்டைலிசான ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here