GST-யை மீண்டும் அமல்படுத்த கால அவகாசம் தேவை என்கிறார் பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியாவில் மீண்டும் பொருள் சேவை வரி எனப்படும் GST வரியை அறிமுகம் செய்வதாயின், அதற்கு முன்னதாக அதனை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் தேவை என்று பிரதமர் தெரிவித்தார்.

இருப்பினும் GST மீண்டும் அமல்படுத்துவதற்கு முன், பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

நாடு தற்போதுள்ள நிலைமையில் நாம் GST-யை அமல்படுத்தினால் அது மக்களுக்குச் சுமையாக தான் அமையும் என்று அவர் சொன்னார்.

எனவே GST-யை மீண்டும் அமல்படுத்த முன்னர் அது தொடர்பான தயார்நிலைகள், கருத்துக்கள் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here