குவாந்தான்:
தெமெர்லோவில் உள்ள கடைசி வெள்ள நிவாரண மையம் இன்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, பகாங் மாநிலம் வெள்ளத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 133 பேரும் வீடு திரும்பியதையடுத்து, SMK ஸ்ரீ செமந்தான் மண்டபத்தில் இயங்கிவந்த கடைசி நிவாரண மையம் மாலை 4 மணிக்கு மூடப்பட்டதாக மாநில குடிமைத் தற்காப்புப் படை இயக்குநர் சே ஆடம் ஏ. ரஹ்மான் தெரிவித்தார்.
“கடந்த அக்டோபர் 13 முதல் தெமெர்லோவை சூழ்ந்த வெள்ளம் முற்றிலும் குறைந்துவிட்டது என்றும், இந்த வெள்ளத்தின் போது, 556 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,859 பாதிக்கப்பட்டு தெமெர்லோவில் உள்ள 10 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
“வடகிழக்கு பருவமழை இன்னும் வரவில்லை, இருப்பினும் தெமெர்லோ பேரிடர் மேலாண்மை குழு இனிவரும் வெள்ளத்தை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் எடுத்துள்ளது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.