கிழக்கு ஸ்பெயினில் மழை வெள்ளத்தில் சிக்கி 63 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலென்சியாவில் கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 63 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. தெருக்கள் ஆறுகளாக மாறின. ரெயில் தண்டவாளங்கள், சாலைகள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்தன. ஸ்பெயின் நாட்டின் மிகக் கொடூரமாக தேசிய பேரிடரில் இதுவும் ஒன்று என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (உள்ளூர் நேரப்படி) பெய்த கனமழை காரணமாக மலாகாவில் இருந்து வாலென்சியா வரை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

சேற்றுடன் மழை வெள்ளம் கார்களை அடித்துச் சென்றன. மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. போலீஸ் மற்றும் மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் வீட்டில் தவித்த மக்களை காப்பாற்றினார்.

வாலென்சியாவில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிகமான மக்கள் காணாமல் போய் இருந்தனர். புதன்கிழமை காலையில் பார்க்கும் அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்திருந்தனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) என வாழ்க்கையில் மிகவும் மோசமான நாள் என வாலென்சியாவில்உள்ள உத்தியெல் நகர் மேயர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எலிகள் போல் சிக்கிக் கொண்டோம். சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 3 மீட்டர் அளவிற்கு வெள்ளம் உயர்ந்தது எனத் தெரிவித்தள்ளார்.

பாதிக்கப்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் மற்ற பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here