அரசாங்க மானியங்களில் கசிவைத் தடுக்க துல்லியமான தரவு தேவை – அன்வார்

பட்டர்வொர்த்: மக்களின் நலன்களுக்காக ஒதுக்கப்படும் அரசு மானியங்களில் ஏற்படும் கசிவுகள் மற்றும் விரயம் ஆகியவை மலேசிய புள்ளியியல் துறை (DOSM) வழங்கும் துல்லியமான தரவு மற்றும் தகவல்களின் மூலம் திறம்பட தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். இந்த மானியக் கசிவுகள் தீர்க்கப்படாவிட்டால், இலக்குக் குழுக்களை முழுமையாக அடையாமல், மானியங்களுக்கான அரசாங்கச் செலவுகள் தொடர்ந்து உயரும் என்று அன்வார் கூறினார்.

விவசாய உதவி, மக்களுக்கான மானியம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி கணிசமானது. Khazanah Megatrends Forum உட்பட பல்வேறு மன்றங்களில் வழங்கப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின்படி மலேசியா, மிகக் குறைந்த வரி வசூல் மற்றும் வரித் தளங்களைக் கொண்டிருந்தாலும் ஆசியாவிலேயே மிக உயர்ந்த மானியங்களை வழங்குகிறது என்று அனைத்துலக பொருளாதார வல்லுநர்களின் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

எங்கள் மானியங்கள் விரிவானவை, நம்பகமான தரவு இல்லாமல், குறிப்பிடத்தக்க கசிவுகளை நாங்கள் காண்கிறோம். இது அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று அவர் சனிக்கிழமை (நவம்பர் 2) DOSM 75ஆவது வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தனது உரையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here