மீன் விநியோகிக்க சந்தைக்கு சென்ற ஆடவர் விபத்தில் பலி

கோத்தா கினாபாலு:

தாவாவ் மாவட்டத்தில் உள்ள பாலத்தின் வழியாக சந்தைக்கு மீன் விநியோகிக்க சென்றவர்களது வாகனம் விபத்துக்குள்ளானதில, ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக டிரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) அதிகாலை 5.25 மணியளவில், ஜாலான் அப்பாஸ் பத்து 2, விபத்தில் காயமடைந்த 31 வயதான பயணி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று தாவாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் வட கூடாட் மாவட்டத்தில் இருந்து தவாவ் மாவட்டத்திலுள்ள சந்தைக்கு மீன் விநியோகம் செய்வதற்கு சென்றதாக தெரியவந்துள்ளது.

“ஓட்டுநர் வேகமாகச் சென்றதால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் இரும்புத் தண்டவாளங்கள் வழியாக சறுக்கி கீழே விழுந்து ஆற்றில் விழுந்துவிட்டதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here