2020 முதல் 3,600 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் திவாலாகியுள்ளனர் – அசாலினா

கோலாலம்பூர்:

டந்த 2020 முதல் இந்தாண்டு செப்டம்பர் 2024 வரையான காலப்பகுதியில் மொத்தம் 3,602 அரசு ஊழியர்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டதாக திவால்நிலைத் துறை தெரிவித்துள்ளது.

இதில் ஒப்பீட்டளவில் 2020 இல் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிகழ்ந்தன, அதாவது மொத்தம் 1,009 அரசு ஊழியர்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து 2021 இல் 678 பேரும், 2022 இல் 621 பேரும் மற்றும் 2023 இல் 628 பேரும் திவாலானதாக கூறப்படுகிறது. அதேநேரம் 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 666 பேர் திவாலானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார்.

அனைத்து அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தலைவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களின் திறனை மதிப்பிட வேண்டும் என்றும் அவர் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்திற்கு அளித்த பதிலில் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here