இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தரம் குறைந்த உணவுப் பொருட்களையே விற்பதாக சர்வதேச அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Nestle, PepsiCo, மற்றும் Unilever உள்ளிட்ட உணவு நிறுவனங்கள் இந்தியா போன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதாக Access to Nutrition Initiative [ATNI ] அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது .
5-க்கு 3.5 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானதாகக் கருதப்படும் நிலையில் , குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 1.8-ஆகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மொத்தம் 30 நாடுகளில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து பேசிய ATNI ஆய்வுக்குழு தலைவர் மார்க் விஜ்னே [Mark Wijne], அரசுகள் உணவுத் தரம் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதுபோன்ற நிறுவனங்கள் ஏழ்மை நாடுகளில் என்ன மாதிரியான பொருட்களை விற்பனை செய்கிறதென்றே தெரியவில்லை, அவர்கள் எந்த அளவுக்கு அந்நாடுகளில் விற்பனையை [ மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் மூலம்] அதிகப்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் அங்கு விற்கும் உணவுப் பொருட்களின் தரம் குறைந்துகொண்டே வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி உலகின் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த மக்களே 70 சதவீதம் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக சாப்ட் ட்ரிங்க்ஸ் குளிர்பானங்கள் உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் சர்க்கரை நோய் பாதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த நாடுகளில் சர்க்கரை நோய்கான மருந்துகள் மற்றும் மருத்துவம் மற்றொரு லாபம் கொழிக்கும் வியாபாராயமாக மாறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.