கோத்தா கினாபாலு:
சபா மாநிலத்தில் பதிவான குற்றவியல் வழக்குகளில் 80 விழுக்காடு வழக்குகளை இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சபா காவல்துறை வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளது.
“சபாவில் இந்த ஆண்டு பதிவான மொத்தம் 3,652 வழக்குகளில் 80.42 விழுக்காடு தீர்த்துள்ளது, இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 3,432 வழக்குகளில் 78.41 சதவீதமாக இருந்தது என்று, சபா காவல்துறை தலைவர் ஆணையர் டத்தோ ஜௌதே டிகுன் கூறினார்.
எவ்வாறாயினும், சபா குற்றவியல் வழக்கு விகிதத்தில் 6.41 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
“இந்த அணுகுமுறை சமூகத்தின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது, ஏனெனில் குற்றம் சிறியதா அல்லது பெரியதா என்பதைப் பொருட்படுத்தாமல் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்ற பயம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.