புரோட்டோன் சாகா’ கார்கள் எகிப்தில் தயாரிக்கப்படும்- பிரதமர்

கெய்ரோ:

பிரோட்டோன்’ (Proton) வாகன நிறுவனத்தின் ‘புரோட்டோன் சாகா’ வகை கார் வரும் டிசம்பர் மாதம் முதல் எகிப்தில் தயாரிக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று (நவம்பர் 12) தெரிவித்தார்.

அதன்படி எகிப்தில் புரோட்டோன் சாகா கார்களின் பாகங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் என்றும், இது இருநாட்டு ஒத்துழைப்பில் புதிய அணுகுமுறையைப் பின்பற்றி முன்னெடுக்கும் ஒரு முயற்சி என்று அன்வார் குறிப்பிட்டார்.

“புரோட்டோன் வாகன நிறுவனம் மட்டுமல்ல. அது மலேசிய அடையாளத்தின் ஓர் அங்கம், மலேசியாவின் பெருமை,” என்று, எகிப்தில் அமையும் புரோட்டோன் ஆலையின் தொடக்க நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

உள்ளூர் தொழில்துறைகளை மேம்படுத்த இத்தகைய கூட்டு முயற்சிகள் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நம்பிக்கை, நட்பு ஆகியவற்றின் அடிப்படையில் மலேசியா, எகிப்தில் செயல்படுகிறது” என்று அவர் சொன்னார்.

எகிப்து தொழிற்சாலையில் 2024லிருந்து 2026ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 16,000 புரோட்டோன் சாகா கார்களைத் தயாரிப்பது இலக்காகும்.

அந்த கார்களின் மொத்த மதிப்பு சுமார் 570 மில்லியன் ரிங்கிட் என்று பிரதமர் கூறினார்.

எகிப்தின் கிஸா நகரில் புதிய புரோட்டோன் ஆலை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here