பிரேசிலில் குண்டுவெடிப்பு; ஒருவர் மரணம்

பிரேசிலில் நவம்பர் 13ஆம் தேதியன்று இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

பிரேசிலின் தலைநகரம் பிரேசிலியாவில் உள்ள முக்கிய சின்னமான ‘பிளாசா ஆஃப் தி த்ரீ பவர்ஸ்’ எனும் இடத்தில் குண்டுகள் வெடித்தன.

குண்டுவெடிப்புகள் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றக் கட்டடம், அதிபர் மாளிகை அருகில் நிகழ்ந்தன.

இதில் ஒருவர் மரணம் அடைந்தார்.

முதல் குண்டுவெடிப்பு பிரேசிலின் உச்ச நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்தது. உச்ச நீதிமன்றத்தில் இருந்தோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here