கம்போங் காசிப்பிள்ளை ஶ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 தொடங்கி ஆலயத்தின் திருப்பணி தொடக்க விழாவுடன், நன்கொடை திரட்டும் தொடக்கமும் நடைபெறவிருப்பதாக ஆலயத்தலைவர் தி.மகேஸ்வரன் தெரிவித்தார்.
கம்போங் காசிப்பிள்ளையில் அருள் பாலித்து வரும் ஶ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் மூன்றாவது கும்பாபிஷேக விழா 2026ஆம் ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். ஆலயத்தை விரிவுப்படுத்தி சமுதாய நிகழ்வுகளுக்கு பங்களிப்பு வழங்கும் எண்ணம் கொண்டுள்ளோம்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வினை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசிய துணைத்தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் முருகன் தொடக்கி வைக்கவுள்ளார். பக்த பெருமக்கள் திரளாக இந்நிகழ்வில் கலந்து எல்லாம வல்ல அம்பாளின் அருளை பெய்யுற்றுமாறு ஆலயத் தலைவரும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.