அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கிடையில் ‘புறநானூறு’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்தார். ஆனால் ஒரு சில காரணத்தால் இதில் இருந்து சூர்யா விலகிவிட்டார். இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெயம் ரவி மற்றும் நிவின் பாலி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
























