மெக்சிகோ சிட்டி,வட அமெரிக்கா நாடானா மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம் வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று வழக்கம்போல் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மதுபான விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.