சுனாமி பேரழிவின் 20-ம் ஆண்டு நினைவு தினம்: கடற்கரையில் பொதுமக்கள் அஞ்சலி

தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.எத்தனை ஆண்டுகளானாலும் சுனாமி தந்த வடு மாறாது. வான் உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் வாரிச்சுருட்டிச் சென்ற உயிர்கள், சொத்துகளின் எண்ணிக்கையை சொல்லி மாளாது. பலர் தங்களது உறவுகளை இழந்து மாறாத சோகத்துடன் இன்றும் கண்ணீருடன் வாழ்கிறார்கள்.

இந்நிலையில் 20-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் சிங்காரத்தோப்பு கடற்கரையில் சுனாமியில் உயிர் நீத்தவர்களை எண்ணி ஏராளமான மக்கள் கடலில் பாலை ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.பழவேற்காடு கடற்கரையிலும் மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here