ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி: 6 நாட்களாக கண்ணீருடன் காத்திருக்கும் தாய்!

ஜெய்ப்பூர்; ராஜஸ்தான் மாநிலத்தில் 700 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் முயற்சி ஆறாம் நாளாக தொடர்ந்து நடக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தில் 700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு விவசாய நிலத்தில் இருக்கிறது. இந்த ஆழ்துளை கிணறு அருகே, விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி சென்ட்டா, டிசம்பர் 23ம் தேதி தவறி விழுந்தார். ஆறு நாட்களாக சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சூழலில் மீட்பு பணி தாமதம் குறித்து சிறுமியின் தாய் தோலி தேவி கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறியதாவது: ஆறு நாட்கள் ஆகிறது. என் மகள் பசியில் அவதி அடைந்து கொண்டு இருக்கிறாள். இதே கலெக்டரின் பிள்ளையாக இருந்தால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுமா? இவ்வளவு நாட்கள் ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவிக்க விடுவார்களா? தயவு செய்து என் மகளை சீக்கிரம் ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வாருங்கள். இவ்வாறு மூன்று வயது சிறுமியின் தாய் அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கல்பனா அகர்வால் கூறியதாவது; ஆழ்துளை கிணறு அருகே, இணையான குழி தோண்டி குழந்தையை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழிக்குள் இறங்கிய, என்.டி.ஆர்.எப், படையினர் 2 பேர் கையால் துளையிடுகிறார்கள். நாங்கள் அவர்களை கேமராவில் பார்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here