உத்தர பிரதேசம்: கும்பமேளாவிற்கு சென்றபோது விபத்து – 4 பேர் உயிரிழப்பு

லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள முன்ஷிகஞ்ச் பைபாஸ் சாலையில் கார் மற்றும் டிராக்டர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேல்சிகிச்சைக்காக ரேபரேலி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் லக்னோவில் உள்ள டெலிபாக் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here