42வது மாடியின் லிப்டில் நான்கு பேர் சிக்கிக்கொண்டதில் பரபரப்பு

இரவு தாமான் டானாவ் கோத்தாவில் உள்ள ஒரு குடியிருப்பின் 42வது மாடியின் லிப்டில் lift நான்கு பேர் சிக்கிக்கொண்டதில் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 10.59 மணிக்கு தகவல் கிடைத்ததாக கோலாலம்பூர், செராஸ், செந்துல் மாவட்ட குடிமை தற்காப்பு துறை அதிகாரி மேஜர் அமாட் ஜுனைடி டுக்குட் சுஹார்த்தோ (Ahmad Junaidi Dukut Soerharto) தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் மின்தூக்கியில் சிக்கியவர்கள் இரண்டு பெண்கள், ஓர் ஆண் மேலும் ஒரு சிறுமி என அவர் கூறினார்.

பின்னிரவு 2.07 மணிக்கு மின்தூக்கியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக கீழே கொண்டுவரும் பணிகள் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.

அந்த நான்கு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னர் அவர்கள் மருத்துவப் பரிசோனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here