நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து துப்பாக்கி சூடு; 40 பேர் பலி

நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் இரு குழுக்கள் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தநிலையில், ஒரு கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த ஒரு கும்பல் ஜைகே சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 40 பேர் பலியானார்கள். மேலும் பாஸ்சா பகுதியில் உள்ள ஜிக் சமூகத்தினரின் வீடுகளை அழித்து சூறையாடினர். இது தொடர்பாக நைஜீரியா அதிபர் போலா டினுபு கூறுகையில்,

இந்த நெருக்கடியை முழுமையாக விசாரித்து வன்முறை செயல்களை திட்டமிட்டதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here