விரைவுச்சாலையில் அதிகாலை ஏற்பட்ட விபத்து: மூவர் பலி

வடக்கு நோக்கிச் செல்லும் கோலாலம்பூர்- சிரம்பான் விரைவுச் சாலையில், பாலாகோங் வெளியேறும் இடத்திற்கு அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். அதிகாலை 5.57 மணிக்கு ஒரு கார் சறுக்கிச் சென்று பின்னர் சாலை தடுப்பு சுவரில் மோதியதாக நம்பப்படும் ஒரு தகவல் தங்களுக்குக் கிடைத்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

காலை 6.07 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், வாகனத்தில் சிக்கிய மூன்று பேரைக் கண்டனர். பெரித்தா ஹரியானின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்களை வெளியேற்றத் தீயணைப்புத் துறைக்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இந்த நடவடிக்கை காலை 7.29 மணிக்கு முடிவடைந்தது. வழக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here