கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் கார் மோதியதில் மூவர் மரணம்

கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் மூவர் மரணம் அடைந்தனர்.

தகவல் அறிந்து காலை மணி 6.07 அளவில் சுங்கை பீசி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று சுவரில் மோதி மிகவும் மோசமாக சேதமடைந்த அக்காரின் மையப் பகுதியை கனரக இயந்திரத்தினால் வெட்டி மூவரின் உடல்களையும் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீட்டனர்.

அக்காரில் சிக்கிக் கொண்ட மூன்று இந்திய ஆடவர்களை வெளியே கொண்டுவருவதற்கு ஒரு மணி நேரம் பிடித்ததாக வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அந்த மூவரும் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதால் அவர்களின் உடல்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here