கெஅடிலான் கட்சித் தலைவர் பதவிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை

நேற்றிரவு நிறைவடைந்த கட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில், கெஅடிலான் கட்சித் தலைவர் பதவிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

இருப்பினும், 2025-ஆம் ஆண்டு முதல் 2028-ஆம் ஆண்டு வரைக்குமான தவணைக்கு, கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட, 12 உறுப்பினர்கள் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் துணைத் தலைவர் பதவிக்கு, நுருல் இசா அன்வாரும், நடப்பு துணைத் தலைவரும்,
பொருளாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லிக்கு இடையில் நேரடி போட்டி நிலவ உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here