சென்னை:
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொள்கை எதிரியான பாஜக, அரசியல் எதிரியான திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தவெக நிச்சயம் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி தொடர்பாக பிற கட்சிகள் பேசுவதை எல்லாம் தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்த முடிவுகளை உரிய நேரத்தில் தவெக தலைவர் விஜய்தான் எடுப்பார் என்றும், அதுவரை வெளியாகும் பல்வேறு ஆரூடச் செய்திகளை தவெகவினர் பொருட்படுத்த வேண்டாம் என்றும் கூறினார்.
“கூட்டணி சம்பந்தமாக பேச இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது. தேவையான நேரத்தில் எங்கள் தலைவர் உரிய அறிவிப்புகளை வெளியிடுவார்,” என்றார் நிர்மல் குமார்.