அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 11 பேர் காயம்

வாஷிங்டன்,அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் ஹோரி நகரில் உள்ள லிட்டில் ரிவர் பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது.

கடற்கரை நகரமான இப்பகுதியில் அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதையடுத்து, இந்த துப்பாக்கி சூடு நடத்தியது யார்? எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here