பிகேஆர் தேர்தல் தோல்வியை கடந்து ஆசியான் உச்சநிலைமாநாட்டிற்கு வருகைத் தந்த ரஃபிஸி

 பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமைச்சரவையில் அவரது எதிர்காலம் குறித்த ஊகங்கள் இருந்தபோதிலும் 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, தொடர்புடைய உச்சநிலை மாநாடுகளின் இரண்டாவது நாளில் இன்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி வருகைப் புரிந்தார். காலை 8 மணிக்கு தொடங்கிய 16ஆவது புருனே-இந்தோனேசியா-மலேசியா-பிலிப்பைன்ஸ் கிழக்கு ஆசியான் வளர்ச்சிப் பகுதி (BIMP-EAGA) உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள ரஃபிஸி இன்று அதிகாலை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) வந்தார்.

புருனேயின் சுல்தான் ஹசனல் போல்கியா, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ உள்ளிட்ட பிராந்தியத் தலைவர்களும் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் ஆகியோருடன் அவர் இணைந்தார்.

ரஃபிஸியின் வருகையின்போது அன்வார் பிற ஆசியான் பிரதிநிதிகளுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்தார். பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி, பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தோற்றால் பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முன்பு கூறியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை நூருல் இஸ்ஸா அன்வாருடன் நடந்த நேரடிப் போட்டியில் அவர் தனது பதவியைப் பாதுகாக்கத் தவறிவிட்டார். கட்சித் தலைவர் அன்வாரின் மகள் நூருல் இஸ்ஸா – ரஃபிஸி 3,866 வாக்குகளைப் பெற்று 9,803 வாக்குகளைப் பெற்று பதவியை வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here