ஓ.டி.டியில் வெளியாகும் “லெவன்” திரைப்படம்

சென்னை,இயக்குனர் சுந்தர் சி-யிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘ஆக்சன்’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் லோகேஷ் அஜ்ல்ஸ். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லெவன்’ எனும் திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, ‘ஆடுகளம்’ நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் ஆங்கில பாடல் இடம்பெற்றுள்ளது. இதை இயக்குனர் லோகேஷ் அஜ்ல்ஸ் எழுதியுள்ளார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

நவீன் சந்திரா நடித்துள்ள ‘லெவன்’ படம் வரும் கடந்த மாதம் 16ம் தேதி வெளியானது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வருகிற 13ம் தேதி வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here