138 ரன்னில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா

லார்ட்ஸ், ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக லபுஸ்சேன் மற்றும் கவாஜா களம் கண்டனர். இதில் கவாஜா ரன் எடுக்காமலும், லபுஸ்சேன் 17 ரன்னிலும், அடுத்து வந்த கேமரூன் கிரீன் 4 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பியூ வெப்ஸ்டர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் ஸ்மித் 66 ரன் எடுத்த நிலையிலும், பியூ வெப்ஸ்டர் 72 ரன் எடுத்த நிலையிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் கண்ட அலெக்ஸ் கேரி 23 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 212 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்னும், ஸ்மித் 66 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட் வீழ்த்தினார்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here