Home விளையாட்டு

விளையாட்டு

புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது ஜேடிதி

 2024, 2025 சூப்பர் லீக் போட்டி, ஆசிய லீக் போட்டிகளின், புதிய பருவத்தில் களமிறங்குவதற்கு, ஜோகூரின் ஜேடிதி தனது புதிய ஜெர்சியை நேற்று அதன் அரங்கில் அறிமுகப்படுத்தியது.சொந்த அரங்கில் விளையாடும்போது அணிந்துகொள்ள நீலம், சிவப்பு நிற ஜெர்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதேவேளையில், எதிரணியின் இடங்களில் விளையாடுவதற்கு வெள்ளை நிற ஜெர்சிகள்...

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் அபார வெற்றியைப் பதிவு செய்தனர். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் பிரிக்டோன் அணியைச் சந்தித்து விளையாடினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். மென்செஸ்டர் சிட்டி அணிக்காக பில் போடன் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை கெவின் டி புருனே, ஜூலியன் அல்வாரேஸ் ஆகியோர் அடித்தனர்.

உலகக் கோப்பை வில்வித்தை: ...

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி சீனாவின் ஷங்காய் நகரில்  நடந்து வருகிறது. இதில் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.ஆண்கள் பிரிவில் அபிஷேக் வர்மா, பிரதமேஷ் பாலசந்திரா, பிரியான்ஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தனது முதல் இரண்டு சுற்றுகளில்...

தோல்விக்கு அதுதான் காரணம் – ருதுராஜ் கெய்க்வாட்

ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரின் 39ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி லக்னோவிடம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற...

சதுரங்கப் போட்டி: முதல் நிலையில் சித்தியவான் சுங்கை வாங்கி 2 தமிழ்ப்பள்ளி  வெற்றி

(ராமேஸ்வரி ராஜா) ஷா ஆலாம், ஏப். 25- தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் மொத்த புள்ளிகளின் அடிப்படையில்  பேராக், சித்தியவான் சுங்கை வாங்கி 2 தமிழ்ப்பள்ளி வெற்றிக் கிண்ணத்தை வாகை சூடியது. இரண்டாம் நிலையில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வெற்றிபெற்ற  வேளையில் மூன்றாம் இடத்தை பந்திங் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி கைப்பற்றியது. மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்...

சதுரங்கப் போட்டியில்  ...

பி.ராமமூர்த்தி மெந்தகாப்,கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி  தேசிய வகை மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஷா  ஆலாமில் நடைபெற்ற  தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான  சதுரங்கப் போட்டியில் மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளியைப் பிரதிநிதித்து 11 மாணவர்கள் கலந்துகொண்டனர்.நாடு தழுவிய அளவில் சுமார் 1,200 மாணவர்கள் கலந்துகொண்ட  இச்சதுரங்கப் போட்டியில் 8 வயது பெண் மாணவர் பிரிவில் மாணவி கவினா ஸ்ரீ  முருகன் மூன்றாம் நிலை பரிசினை வென்றார். 10 வயது மாணவி பிரிவில் கு.ஐஸ்வர்யா ஐந்தாம் நிலையிலும் 12 வயது பெண் மாணவி பிரிவில் கு.கவின்யா 26ஆவது  நிலையிலும் பரிசை வென்றனர்.  மாணவர்களுக்கு இம்மாணவர்களுக்குக் கேடயமும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த  ஆசிரியை ஞா.அனுராதா, இணைபாடப் பிரிவு துணைத் தலைமையாசிரியர் ஜெ.செல்வேந்திரன், ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய பெற்றோருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி வாசுகி குப்பன்  நன்றி கூறியதுடன் இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

FIDE 2024 செஸ் போட்டியில் சாம்பியனான குகேஷ்

இந்தியா, சென்னையை சேர்ந்த 17 வயதான குகேஷ் தொம்மராஜு, FIDE 2024 செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் இந்த ஆண்டின் இறுதியில் 2024 உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக தற்போதைய உலக சாம்பியனான டிங் லிரனுடன் அவர் மோதவிருக்கிறார். 17 வயதில், கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற இளைய வீரர்...

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியின் வெற்றி பெற்றனர். மோலினியூக்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்....

கேன்டிடேட் செஸ்; புள்ளிப்பட்டியலில்   ...

சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் இந்தச் சுற்றில் பிரான்சின் அலிரெஸா பிரூஸ்ஜாவை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 8.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13ஆவது சுற்றில் அமெரிக்காவின் பேபியானோ கருவானாவிடம் தோல்வி கண்டார். மற்றோர் இந்திய வீரர் விதித்...

தோல்வியால்  துவண்டு  ...

இந்தத் தவணை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணி காலிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாலும் அது தமக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தவில்லை என்று அவ்வணி  நிர்வாகி கோர்டியாலா தெரிவித்துள்ளார்.நாங்கள் கடந்த தவணையில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தோம். அந்த மூன்று போட்டியும் மிக  முக்கியமானவை. அதேபோல் இந்த முறையும் மீண்டும் அச்சாதனையை புரிய இலக்கு கொண்டிருந்தோம். குறிப்பாக ரியல் மாட்ரிட் அணியுடனான இந்த காலிறுதிச் சுற்று ஆட்டத்தில்  எனது அணி ஆட்டக்காரர்கள் வெற்றி பெறுவதற்கு அனைத்தையும் வழங்கினஆனால் அதேசமயம் ரியல் மாட்ரிட் அணியும் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியது என்றார் அவர். மேலும் கால்பந்து  விளையாட்டில் வெற்றி  தோல்வியை கணிக்க முடியாது. எனவே இந்த தோல்வியினால் நான் பெரும் கவலை கொண்டிருக்கவில்லை.இருப்பினும் எஞ்சியிருக்கும் இங்கிலாந்து பிரிமியர் லீக், எப்ஏ கிண்ண போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் என கோர்டியாலா கூறியுள்ளார்.